தரையில் தங்கமீன்கள்

சிறு வயதில், ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து முடித்த பிறகு தான் எழுந்துக் கொள்வேன். புத்தகம் அவ்வளவு சுவாரசியமாக இருந்ததா என் கவனம் அத்தனை நேரம் சிதறாமல் இருந்ததா தெரியவில்லை. ஆனால் இன்று அப்படி ஒரு நிகழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நேர்காணல்களில் யாராவது ரொம்ப மெதுவாக பேசினால், வீடியோவின் வேகத்தை அதிகரித்து வைத்துப் பார்க்கும் பழக்கம் திடீரென தொற்றிக்கொண்டுள்ளது. படத்தில் ஏற்படும் தொய்வுகளை ஃபார்வார்ட் பட்டனை அழுத்தி சரிசெய்யும் பழக்கம், திரையரங்குகள் வரைContinueContinue reading “தரையில் தங்கமீன்கள்”

மனித சுபாவம்

முன் பின் பழக்கம் இல்லாத ஒரு நபரிடம் பேசுவது ஏன் இத்தனை சுலபமானதாக இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? முற்றிலும் தெரியாதவர் இல்லை, பெயரளவில் தெரிந்திருக்கும் ஆனால் பேசியது கிடையாது. திடீரென ஒரு உரையாடல் தொடங்கும். அது இரண்டு மணி நேரத்தில் இந்த உலகையே சுற்றிவரும். இத்தனை சுலபமாக, கோர்வையாக வார்த்தைகள் வந்து விழுமா என்பதை போல, மனதில் எழுப்பிய சுவர்கள் எல்லாம் கரையும். ஒரே வாரத்தில் அவரைப் பற்றி ஒரு முனைவர் பட்டம் பெறுமளவிற்குContinueContinue reading “மனித சுபாவம்”

Design a site like this with WordPress.com
Get started