கீழ்வருவது ஒரு ஆங்கில தொலைக்காட்சித் தொடரில் வந்த வசனம். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியை விமர்சித்து பேசப்படும் வசனம் இது. அதை இன்று இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளோடு பொறுத்தி பார்க்க முடிகிறது! நான் என் அடையாளத்தை காட்டிக்கொள்வதைஆபத்தான விஷயமாக நினைக்கிறார்கள் சிலர்.ஏன் துறுத்திக் கொண்டு நிற்கிறாய், கூட்டத்தோடு கலந்துவிடு அதிகாரத்தை எதிர்த்து பேசாதே என்கிறார்கள்!எனது பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை?நான் ஏன் கூட்டத்தோடு ஒன்றிணைய வேண்டும்அதில் என்ன நியாயம் இருக்கிறது ?Continue reading "ஏன் துறுத்திக்கொண்டு நிற்கிறாய்?"
சாரி! நான் அரசியல் பேசுவதில்லை…
சாரி நான் அரசியல் பேசுவதில்லை என நமட்டு சிரிப்புடம் சொல்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இது வரை எதற்காகவும், நீதிமன்றத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. அவர்களது அடிப்படை உரிமை எங்கேயும் மறுக்கப் பட்டிருக்காது. அதுவே ஒரு privilege தான். அந்த privilege அவர்களுக்கு எப்போதும் அரணாய் இருந்திடுமா? ஏனென்றால் நாம் உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், படிக்கும் கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கிறது. அதை கண்டும் காணாமல்Continue reading "சாரி! நான் அரசியல் பேசுவதில்லை…"
உலகைக் கட்டியிழுத்தாள்
நான் அவளை பார்க்கும் போது, அவள் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவள் அந்த பால்கனி கம்பியில் தன் கைகளை வைத்து இந்த உலகையே கட்டிப்போட்டிருக்கிறாள். இது ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதிய வரி. இந்த வரியை படித்த போது உங்கள் மனதில் அந்த பெண்ணின் சித்திரம் எப்படியானதாக இருக்கிறது? அந்தப் பெண்ணுக்கு உலகை கட்டிப்போடும் அளவிற்கு அப்படி என்ன குணம் இருந்திருக்கும். அழகா? அறிவா? ஆளுமையா? ஒவ்வொருத்தரது கற்பனைக்கும் ஒவ்வொரு நியாயம். மூன்றுமேContinue reading "உலகைக் கட்டியிழுத்தாள்"
மனித சுபாவம்
முன் பின் பழக்கம் இல்லாத ஒரு நபரிடம் பேசுவது ஏன் இத்தனை சுலபமானதாக இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? முற்றிலும் தெரியாதவர் இல்லை, பெயரளவில் தெரிந்திருக்கும் ஆனால் பேசியது கிடையாது. திடீரென ஒரு உரையாடல் தொடங்கும். அது இரண்டு மணி நேரத்தில் இந்த உலகையே சுற்றிவரும். இத்தனை சுலபமாக, கோர்வையாக வார்த்தைகள் வந்து விழுமா என்பதை போல, மனதில் எழுப்பிய சுவர்கள் எல்லாம் கரையும். ஒரே வாரத்தில் அவரைப் பற்றி ஒரு முனைவர் பட்டம் பெறுமளவிற்குContinue reading "மனித சுபாவம்"
தேவையில்லா ஆணிகள்
களவும் கற்று மற என சொல்வார்கள். எனக்கு தேவையில்லாத அறிவு என எதையுமே ஒதுக்கக் கூடாது என்பது தான் அதற்கு பொருள். குறிக்கோள் இன்றி, இதனால் என்ன பயன் விளையும் என்று எதிர்பாராமல், ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் எப்போது கடைசியாக படித்தீர்கள்? எதையாவது படித்துவிட்டால், அதை பயன்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை ஆனால் அது உடனே நடந்துவிட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. சில வீடுகளில் கதை புத்தகம் படிப்பதையேContinue reading "தேவையில்லா ஆணிகள்"
எனை வளர்த்த பத்தாண்டுகள்
இந்த வருடம் நிறைவடையும் தருவாயில் இருக்கிறோம். ஆனால் இந்த வருடம் முடியும் போது, இன்னொரு விஷயமும் நடக்கும். இந்த தசாப்தம் முடிய போகிறது. 90களில் பிறந்த பலருக்கும் இந்த பத்தாண்டுகளில் தான் நிறைய மைல் கல்கள் வந்திருக்கும். பள்ளி படிப்பை முடித்தது, கல்லூரியில் சேர்ந்தது, கல்லூரியை முடித்து வேலையில் சேர்ந்தது என அடுத்த 40-50 வருடத்திற்கான அடிக்கற்களை இந்தப் பத்தாண்டுகளில் தான் நட்டிருப்போம். எனக்கு எழுத வரும் என்பதை கண்டுபிடித்தது, என் எழுத்துக்கான முதல் அங்கீகாரத்தை பெற்றது,Continue reading "எனை வளர்த்த பத்தாண்டுகள்"
சங்கிலித் தொடர்
நான்கு பசு மாடுகள் சாலையை கடப்பதற்காக, நகரின் பிரதான சாலையில், ஒரு 40-50 வாகனங்கள் காத்திருந்தன. மாடு அக்சலேட்டரை மிதித்து வேகமாக செல்ல முடியாதென தெரிந்தாலும், ஹாரனை விடாது அமுக்கியபடி ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஒரு மாடுக்கும் இன்னொரு மாடுக்கும் இடையில் உள்ள இடைவேளையில் ஒரு மாடு சர்ரென்று வண்டியை பாய்ச்சியது. மாடுகள் சற்று மிரண்டாலும், மெதுவாகவே சாலையை கடந்தன. வேளச்சேரி -தரமணி பிரதான சாலையின் நடுவிலேயே ஒரு மாடு அமர்ந்திருக்கும். சாலைக்கு இரு பக்கங்களும், நிமிடத்திற்குContinue reading "சங்கிலித் தொடர்"
இரசனை ரசம்
சில புத்தகங்கள் தான் நம் சிந்தனை ஓட்டத்தை வேகமாக செலுத்தும், இது வரை இரத்தம் பாயாத மூளையின் செல்களுக்கு இரத்தம் பாய்ச்சும். இது பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்திராத, தற்செயலாக ஏதோ ஒரு பக்கத்தை பிரட்டிய புத்தக்கத்தில் தான் நிகழும். நம் இரசனை இத்தனை முதிர்ச்சியானதா என்று மனம் குதூகலிக்கும், உடனே அதை யாரிடமாவது சொல்லிவிட துடிக்கும். அப்படி ஒரு சிந்தனையோட்டம் தான் இது. தோன்றிய எண்ணங்களை, தோன்றிய வரிசையிலேயே எழுதுகிறேன். வாளேந்திய வீரன் ஒருவன், இரவுக் குறிக்காகContinue reading "இரசனை ரசம்"
அறிவியாதி
அறிவு தரும் கர்வம் தான் உலகத்தின் மிக ஆபத்தான வியாதி. அறிவை எப்போதும் அனுபவம் தோற்கடிக்கும் என்ற உண்மையை உணர்ந்தவனே உண்மையான அறிவாளியாக இருக்க முடியும் . நிறைய புத்தகங்களை படிக்கிறோம், அது குறித்து எழும் விமர்சனங்களை படிக்கிறோம், விமர்சனங்களின் விமர்சனங்களையும் படிக்கிறோம். ஆனால் ஒரு விஷயத்தை எல்லா கோணங்களில் இருந்தும் யார் ஒருவராலும் படித்து தெரிந்துக் கொள்ள முடியாது. களத்திலேயே இருப்பவர்களுக்கு கூட எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள சில மாதங்கள் ஆகலாம். எனவே நமது கருத்துக்களுக்குContinue reading "அறிவியாதி"
100 நாள் கூத்து
சரியாக 100 நாட்களுக்கு முன்னர் தான, தினமும் குறைந்தது 2 கி.மீ ஒடுவேன் என்ற சபதத்தை எடுத்திருந்தேன். ஆரம்பித்த போது இருந்த உற்சாகமும், ஆர்வமும், ஒடுவதால் கிடைக்கும் எண்டார்ஃபின் போதையும் சந்தோஷமாக இருந்தது. அதற்கான செயலிகளை டவுன்லோட் செய்து, ப்ளூடூத் இயர்போன்ஸ் வாங்கி, தினமும் எவ்வளவு தூரம் ஒட முடிகிறது என கணக்கு செய்வது முதல், ஒரு கிலோமீட்டர் ஒடுவதற்கான நேரத்தை கணக்கிடுவது வரை , ஓடுவது என்பதே ஒரு ஜாலியான அனுபவம் தான். மனதளவிலும் சரி,Continue reading "100 நாள் கூத்து"