( Before you begin, scroll down and do some extra reading about the OK boomer trend for some context. If you live on the Internet, like myself, start reading!) I am unsatisfied with my job. You hear this a lot in the social chatter these days. People who are not just feeling the passion forContinueContinue reading “OK MILLENIALS”
Author Archives: Krithika
CTRL + F5
லார்க் என்றப் பறவை அதிகாலையிலேயே தன் நாளைத் தொடங்கி விடுமாம். அதே போல மாலையிலும் சீக்கிரம் கூடடைந்து விடும். சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழிக்கும் பழக்கம் உடையவர்களை லார்க் பறவையுடன் ஒப்பிடுவது உண்டு. இணையத்தின் கண்டுபிடிப்பு பல நன்மைகளை செய்தாலும், நம் எல்லோரது தூக்கத்தையும் கண்டிப்பாக பறித்துக் கொண்டது. சராசரியாக இரவுத் தூங்கும் நேரமே ஒரு இரண்டு – மூன்று மணிநேரம் பின்னால் சென்றால் விட்டது. 9 மணிக்கு ராதிகா நடிக்கும் சீரியலை பார்க்கும் போதே தூக்கம்ContinueContinue reading “CTRL + F5”
கதைகளின் கதை
தமாஷா படத்தில் ரன்பீரின் கதாபாத்திரம், சிறு வயதிலிருந்து ஒரு வயதானவரிடம் சென்று காசு கொடுத்து கதை கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் ராமாயணம், மகாபாரதம், ரோமியோ ஜூலியட் என கலந்துகட்டி தினமும் கதை சொல்வார். தன்னையே அந்த கதைகளின் கதாபாத்திரங்களாக நினைத்துக் கொண்டு நடித்து பார்ப்பான். அவர் கதைகளை மாற்றி மாற்றித் தான் சொல்கிறார் என தெரிந்தாலும், அவருடைய கதையை விடாது சென்று கேட்பான். கதையென்றாலே அவர் தான் என வேத் ( ரன்பீர்) மனதில் பதிந்து விடும்.ContinueContinue reading “கதைகளின் கதை”
சுவர்களற்ற உலகம் வேண்டும்
தரம் அல்லது சமத்துவம். ஏதேனும் ஒன்றினை மட்டுமே அடைய முடியும். எல்லாருக்கும் வாயிலை திறந்து விட்டால், தரம் நிச்சயம் குறையும். இப்படி சாதி வாரியான இட ஒதுக்கீடை எதிர்த்து சமூக வலைதளங்களில் மட்டும், ஆயிர கணக்கான கருத்துகளை தினம் தினம் கண்டெடுக்க முடியும். ஒரு பெரும் சுவர் இவர்கள் மீதெல்லாம் எப்போதும் விழவே விழாது என்ற தைரியத்தில் தானே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். படித்த, இணையம் பயன்படுத்த தெரிந்தவர்களிடமே இடஒதுக்கீடு குறித்த எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால்,ContinueContinue reading “சுவர்களற்ற உலகம் வேண்டும்”
இது மனித நதி
மகாநதி திரைப்படத்தில், கமல்ஹாசனுக்கு, பூர்ணம் விஸ்வநாதனுக்கும் நடக்கும் உரையாடல் தான் இது. நேபியர் பாலத்தில் கூவம் ஆற்றை பார்த்தபடி நடக்கும் இந்தக் காட்சி. PV : நம்ம போயிடலாம், நாத்தம் குடல அறுக்குறது! KH : ஏன் இருந்து அனுபவிங்களேன். இன்னிக்கு நேத்தா நாத்தம் அடிக்குது. அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை, நீங்க தான் பூஜை ரூமுல போய் மந்திரம் சொன்னதும் கூரைய பிச்சுக்கிட்டு தங்கக் காசு கொட்டுமே! PV : ஒருத்தன நினைச்சுட்டு எல்லாரையும்ContinueContinue reading “இது மனித நதி”
December (பூ)த்தாச்சு!
December symbolizes happiness. Waking up to rains, flooded streets, reaching for the umbrella/raincoat more often, the excuses to munch on deep fried stuff and ask for work from home options. This is definitely the season to get full use of that expensive raincoat/ rain gear and the time to take out those jackets that youContinueContinue reading “December (பூ)த்தாச்சு!”
அக்கா-ism
ஒரு கூட்டமான, ஆண்கள் நிறைந்த தள்ளுவண்டிக் கடையில் சாப்பிட உங்களுக்கும் கூச்சமாக இருந்திருந்தால், இந்தப் பதிவை தொடர்ந்து படியுங்கள். சரோஜா அக்கா கடையில் இதற்கு முன் ஒரு முறை சாப்பிட சென்றிருந்தோம். கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்க எப்படி சாப்பிட முடியும் என்று நகர்ந்துவிட்டோம். ஆனால் இன்று ஒரு மழை ஒய்ந்த மதிய வேளையில், மனம் மீனை தானே தேடுகிறது. கடை ஆரம்பிக்கும் முன்னே ஒரு 4 பேர் கடை முன்னே காத்திருந்தனர். மழை விட்டு விட்டுContinueContinue reading “அக்கா-ism”
ஆராயிரம் தொப்பிகள்
உலகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும், அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை, அனுதினமும் வாரி இறைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் ஜெயிக்கும், இந்த தொழில் செய்தால் வெற்றி நிச்சயம் என மட்டும் எந்த ஒரு அறிவியல் கொண்டும் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியாது. பரம்பரை பரம்பரையாக தொழில் செய்தால் கூட, ஒரு ஊரின் எல்லைக்கோடுகளைத் தாண்டினாலே அந்த திட்டத்தின் வெற்றிக்கு எந்த உறுதியும் கிடையாது. இதற்கு நிர்வாகம் சார்ந்த வல்லுநர் ஒருவர் சொல்லும் யுக்தி தான் இந்த ஆறு தொப்பிகள்.ContinueContinue reading “ஆராயிரம் தொப்பிகள்”
ஈரமான பாடலே
ஒன்று இருக்கும் போது, இன்னொன்றை தேடுவது தான் மனித இயல்பு. அப்படி மழை சூழ்ந்து நிற்கும் இந்த நாளில் கோடையைப் பற்றி எழுத கை செல்கிறது. புழுக்கமான ஒரு கோடை கால நள்ளிரவில் தான் இந்தப்பாடலை முதலில் கேட்டேன். எத்தனையோ மழைப்பாடல்களை இந்திய சினிமா கண்டிருக்கிறது. இது இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் என்று முழுக்க முழுக்க மழையில் நனைந்து ஆடி களித்த பாடல்களுக்கு கூட இவ்வளவு ஈரம் இருந்திருக்காது. மழைத்துளிகளை சுமந்து வரும்ContinueContinue reading “ஈரமான பாடலே”
நினைவோ ஒரு அலமாரி
உங்கள் நினைவுகளை, பல அடுக்குகளை கொண்ட ஒரு பெரிய அலமாரி போல காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். புதிதான விஷயங்களை செய்யும் போது, புதிய மனிதர்களை பார்க்கும்போது அந்த அலமாரிக்குள் அவர்களுக்கு ஒரு தற்காலிக இடம் கொடுக்கப்படும். அடிக்கடி பார்ப்பவர்களுக்கும், செல்லும் இடங்களுக்கும் மட்டுமே ஒரு நிரந்தர இடம் கிடைக்கும். இந்த நினைவுகளை கட்டிவைப்பது உணர்வு. பழகிய ஒரு மனிதரை பார்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தோஷமும், பிடிக்காத ஒரு நபரை பார்க்கும்போது ஏற்படும் எரிச்சலும் இந்த உணர்வுகளால் தான். ஒரு காலத்தில்ContinueContinue reading “நினைவோ ஒரு அலமாரி”